“நடிகை காயத்ரி ரகுராமை கைது செய்ய வேண்டும்”
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை அவதூறாக பேசிய நடிகை காயத்ரி ரகுராமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகர காவல் ஆணையரிடம் திராவிட விடுதலை கழகம் சார்பில் இந்த புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதில் திருமாவளவன் கருத்துக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக நடிகை காயத்ரி ரகுராம் அவதூறாக பேசி வருவதாகவும், அவர்மீது சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




