குட்கா குடோன்களுக்கு ” சீல் “
தமிழகத்தில் குட்கா,பான் மசாலா,பான் பராக்,ஹான்ஸ் போன்ற போதைப்பொருட்கள் விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது.இந்த நிலையில் கோவையில் சமீப காலமாக கோவையின் பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் சர்வ சாதாரணமாக பொட்டிக்கடைகளில் தாராளமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
காவல் துறையினரும் அவ்வப்போது தீவிர வாகன சோதனை நடத்தி தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.கடந்த சில நாட்களுக்கு முன்னர் காவல் துறையினர் நடத்திய வாகன சோதனையில் சந்தேகத்திற்கிடமான வகையில் கனரக வாகனத்தில் வந்த இருவரை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டதில் மோப்பிரிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் செயல்பட்டு வந்த தடை செய்யப்பட்ட போதைப்பொருள் குடோன் கண்டுபிடிக்கப்பட்டது.காவல் துறையினர் குடோனுக்கு சீல் வைத்ததுடன்,75 லட்ச ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில் கோவை ரங்கே கவுண்டர் வீதி,தாமஸ் வீதி,பொரிக்கார சந்து உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை குடோனில் பதுக்கி வைத்து விற்பனைக்காக கொண்டு செல்லப்படுவதாக தெற்கு வட்டாட்சியர் தேவநாதனுக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் ரங்கே கவுண்டர் வீதி,தாமஸ் வீதி மற்றும் பொரிக்கார சந்து பகுதிகளில் தடை செய்யப்பொருட்கள் உள்ளதா ? என தீவிர சோதனை மேற்கொண்டனர்.விசாரணையில் அப்பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கல்லூரி,பள்ளிகள் அதிகம் நிறைந்த இப்பகுதியில் செயல்பட்டு வந்த குடோனில் இருந்து 350 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்ததுடன் தெற்கு வட்டாட்சியர் தேவநாதன் தலைமையில் காவல்துறையினர் கடைகளுக்கும் சீல் வைத்தனர்.
கோவையில் அண்மைக்காலமாக தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருவது பொது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




