நாட்டின் முன்னேற்றத்தில் மாநிலங்களவையின் பங்கு முக்கியமானது என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். மாநிலங்களவையின் 250 ஆவது கூட்டத் தொடரை ஒட்டி பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர் மாநிலங்கள் அவையில் உறுப்பினர்களாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
அரசியல் தளத்தை தாண்டி பணியாற்றி வருபவர்கள் நாட்டின் முன்னேற்றத்தில் பங்களிக்க மாநிலங்களவை நல்ல வாய்ப்பாக இருந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.அவையில் விவாதங்கள் வரவேற்கப்பட வேண்டியதுதான் என்றும், ஆனால் கூச்சல் குழப்பங்கள் நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நெறிமுறைகளை பின்பற்றுவதில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் பிஜூ ஜனதா தளம் ஆகிய கட்சிகள் மட்டுமே சிறந்து விளங்குவதாகவும், அவர்களைப் பார்த்து பிற கட்சிகள் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் பாராட்டினார்.