உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே பொறுப்பேற்பு!!

உச்ச நீதிமன்றத்தின் 47-வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே பொறுப்பேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

 

கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாயின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து அடுத்த புதிய நீதிபதியாக உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதியாக இருந்த எஸ்.ஏ.பாப்டேவை நியமிக்க, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கியிருந்தார்.

 

இந்நிலையில், இன்று காலை குடியரசுத் தலைவர் மாளிகையில், புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே பதவியேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதையடுத்து அவருக்கு குடியரசுத் தலைவர் ராம் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். உச்ச நீதிமன்றத்தின் 47-வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள எஸ்.ஏ.பாப்டே, 2021-ம் ஆண்டு மார்ச் 23-ம் தேதி வரை இந்தப் பதவியை அலங்கரிப் பார் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply