வடக்கு மாகாண தமிழர்களில் 90% பேர் சஜித் பிரேமதாசாவிற்கு வாக்களிப்பர் என அவரது கட்சிக்கு ஆதரவளிக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், அமைச்சருமான வேலுசாமி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வடக்கு மாகாண தமிழர்கள் சூடு கண்ட பூனை என்றும் நிச்சயமாக ராஜபக்சேவிற்கு வாக்களிக்க மாட்டார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழர்களில் 90 சதவீதம் பேர் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிப்பர்
