ஆபத்தான முறையில் பாறையில் வழுக்கிச் செல்லும் இளைஞர் கூட்டம்

பிரேசிலில் வனப்பகுதியில் குளிக்க சென்ற இளைஞர்கள் பாறைகளில் நின்றவாறே வழுக்கிச்செல்லும் ஆபத்தான செயலில் ஈடுபட்டு வருகின்றனர். நாள் முழுவதும் நீர் ஓடிக் கொண்டே இருப்பதால் பாசம் பிடித்த பாறையின் உச்சிக்கு சென்ற இளைஞர்கள் வேகமாக ஓடி வந்து நின்றவாறே வழுக்கி செல்கின்றனர்.

 

அதிலும் சிலர் சுழன்று சுழன்று வழுக்கி சென்று தங்கள் வீரத்தை வெளிப்படுத்தினர். இதே பாதையில் வழுக்கி செல்லும் போது தவறி விழுந்து கைகால்களை உடைந்தும் தலைக் காயம் ஏற்பட்டு அடிக்கடி உயிரிழப்புகள் நிகழ்வது அதிகமாக இருப்பதால் இது போன்ற நிகழ்வுகளை இளைஞர்கள் தவிர்க்க வேண்டும் என அப்பகுதி காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Leave a Reply