ரஷ்யா வருமாறு பிரதமர் மோடிக்கு புடின் அழைப்பு

ரஷ்யாவில் அடுத்த ஆண்டு மே மாதம் பிரம்மாண்டமான முறையில் நடக்கவுள்ள வெற்றி விழா கொண்டாட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அதிபர் புதின் அழைப்பு விடுத்துள்ளார். பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் மாநாட்டிற்கு இடையில் பிரதமர் மோடியும் புதினம் சந்தித்து பேசினார்.

 

அப்போது இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பாக இரு தலைவர்களும் ஆய்வு செய்தார்கள். புதின் உடனான சந்திப்பு பயன்மிக்கதாக இருந்ததாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருந்தார்.

 

இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்று 75 ஆண்டுகள் ஆவதையொட்டி ரஷ்யா நடத்தவுள்ள வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்க சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் மோடி தன்னுடைய பதிவில் கூறியுள்ளார். இதற்கிடையே அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.


Leave a Reply