திருவாடானை அருகே பாண்டுணகுடி அரசு பள்ளியில் குழந்தைகள் தின விழா

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவாடானை அருகே பாண்டுகுடி அரசு மேல்நிலைப் பள்ளியில் திருவாடானை வட்ட சட்ட பணிகள் குழு இணைந்து குழந்தைகள் தின விழாவினை பள்ளியில் கொண்டாடினார்கள். திருவாடானை நீதித்துறை நடுவர் நீதிபதி பாலமுருகன் தலைமையில் இந்த விழாவானது நடைபெற்றது.

 

இந்த விழாவில் பள்ளி ஆசரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பலர் கலந்துகொண்டார்கள். விழாவில் பேசிய நீதிபதி, மாணவர்கள் தங்களது பாடப்பிரிவுகளை கற்கும் பொழுது சட்டம் பற்றிய அடிப்படை விஷயங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும், படிக்கும் பொழுதே மாணவர்கள் தான் என்னவாக பிற்காலத்தில் வரவேண்டும் என்பதை மனதில் ஆழமாக பதித்து படிக்க வேண்டும் என்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.

 

தங்களது வீட்டில் ஏதாவது சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் இருந்தால் அதற்கு வழக்கறிஞர் வைத்து வாதட இயலாதவர்கள் திருவாடானை நீதிமன்ற வளாகத்தில் இயங்கும் வட்ட சட்ட பணிகள் குழுவை அனுகினால் இலவசமாகவே உங்களது வழக்குகளை நடத்த முடியும் என்று கூறிய அவர் விழாவில் வழக்கறிஞர் விஜயஆனந்தன், கண்ணன் மற்றும் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்துகொண்டார்கள்.


Leave a Reply