தொழில் வளர்ச்சியில் தமிழகத்தில் புதிய பொற்காலம்
தொழில் வளர்ச்சியில் புதிய பொற்காலமாக உள்ள தமிழகத்தில் தொழில் தொடங்க அனைத்து உதவிகளையும் செய்ய தமிழகம் தயாராக இருப்பதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டனில் உள்ள ஹோட்டலில் அமெரிக்கா இந்திய கவுன்சில் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர் பொருளாதார உறவால் அமெரிக்காவும், இந்தியாவும் நெருங்கிக் கொண்டிருப்பதாக கூறினார்.
அமெரிக்கவாழ் இந்தியர்கள் அதிக அளவில் தமிழகத்தில் முதலீடு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர் தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கு ஏற்ற சூழல், திறன்மிகு மனிதவளம், தரமான மின்சாரம் வினியோகம், உட்கட்டமைப்பு வசதிகள் இருப்பதாக கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




