ஆதார் அட்டையில் முகவரி மாற்றம் செய்வது தொடர்பான கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியுள்ளது. பணி நிமித்தமாக வெளியூர்களிலும், வெளி மாநிலங்களிலும் குடியேறுபவர்கள் ஆதார் அட்டையில் முகவரி மாற்றம் செய்ய கடும் சிரமப்படுகின்றனர்.
இதனால் வங்கி கணக்கு தொடங்குவது உள்ளிட்ட சேவைகளை பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே முகவரி மாற்றத்திற்கான கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாளாக முன்வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மத்திய அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் வெளியூர், வெளி மாநிலங்களில் குடியேறுபவர்கள் சுயவிளக்கம் ஒன்றுடன் புதிய முகவரியோடு ஆதார் எண்ணை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது புதிய முகவரியை கொடுத்து ஆதார் எண்ணை மட்டும் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதன் காரணமாக நிரந்தர முகவரி,பணியிட முகவரி என்று இரண்டு முகவரிகளை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். பல லட்சம் பேர் இந்தத் திட்டத்தால் பயன் அடைவார்கள்.