--- --:--:-- --

ஈக்காட்டுத்தாங்கல் மெட்ரோ ரயில் நிலையத்தில், இந்தி எழுத்துக்கள் அகற்றப்படாததால் சர்ச்சை

2

சென்னையில் ஈக்காட்டு தாங்கள் மெட்ரோ ரயில்நிலையத்தில் ஹிந்தி எழுத்துக்கள் அகற்றப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் அறிவிப்பு பலகையில் ரயில் நிலைய பெயர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தன.

 

பின்னர் ஒரு சில ரயில் நிலையங்களில் தமிழ் மற்றும் ஆங்கில பெயர்களுடன், ஹிந்தியிலும் ரயில் நிலைய பெயர்கள் எழுதப்பட்டது சர்ச்சையை உண்டாக்கியது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து ரயில் நிலையங்களில் இருந்து இந்தி எழுத்துக்கள் அகற்றப்பட்டன.

 

இந்நிலையில் சென்னை ஈக்காட்டுதாங்கல் மெட்ரோ ரயில் நிலையத்தில் மட்டும் ஹிந்தி எழுத்துக்கள் அகற்றப்படாமல் உள்ளதாக மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. மேலும் இந்தி எழுத்துக்கள் ஏன் அகற்றப்படவில்லை என சிலர் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் அதனை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon