பாலியல் புகார் வழக்கு: முகிலனுக்கு நிபந்தனை ஜாமீன்

பாலியல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சமூக ஆர்வலர் முகிலனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முகிலன் அதன் பிறகு காணாமல் போனார்.

 

இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில் முகிலன் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து சிபிசிஐடி முகிலனை திருப்பதி ரயில் நிலையத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தது.

 

ஜாமீன் கோரி முகிலன் தாக்கல் செய்த மனு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது தன்னை அடையாளம் தெரியாத நபர்கள் ஜார்கண்டிற்கு கடத்தி சென்றதாகவும் அவர்களிடமிருந்து தப்பித்து திருப்பதி வந்தபோது கைதானதாகவும் முகிலன் தெரிவித்திருந்தார்.

 

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது முகிலன் மீதான பாலியல் வழக்கில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாக கூறிய நீதிபதி அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். கரூரிலேயே தங்கி 3 நாட்களுக்கு ஒருமுறை சிபிசிஐடி அலுவலகத்தில் முகிலன் கையெழுத்திட வேண்டும் என நீதிபதி நிபந்தனை விதித்தார்.


Leave a Reply