சிறுவன் மூக்கில் சிக்கிய மீன்!

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே குளத்தில் குளிக்கும்போது சிறுவனின் மூக்கிற்குள் புகுந்த மீனை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவர் அருண்குமார்.

 

பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்ததும் வீட்டின் அருகே இருக்கும் குளத்தில் நண்பர்களுடன் குளித்துள்ளார். அப்போது அருண்குமாரின் மூக்கிற்குள் ஏதோ புகுந்ததால் வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வலியால் துடித்த அவரை அவரது பெற்றோர் அன்னவாசல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

 

மருத்துவர்கள் பரிசோதனையில் சிறுவனின் மூக்கில் மீன் புகுந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து மூக்கிலிருந்து மீனை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.


Leave a Reply