உயிரிழந்த காளை மாட்டிற்கு இறுதிச் சடங்கு

பாலக்கோடு அருகே பிள்ளையை போல் வளர்த்த காளை உயிரிழந்ததால் மஞ்சள், குங்குமத்துடன் கிராமமக்கள் நல்லடக்கம் செய்து கண்கலங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செவந்தாம்பட்டி கிராமத்தை சேர்ந்த நாராயணன் என்ற விவசாயி வளர்த்து வந்த காளை உடல்நலக்குறைவால் பரிதாபமாக உயிரிழந்தது.

 

கட்டுமஸ்தான கம்பீரமாய் சுற்றித்திரிந்த காளை பொங்கல் சமயத்தில் பல்வேறு ஊர்களில் நடைபெறும் எருதுவிடும் விழாக்களில் கலந்து கொண்டு ஏராளமான பரிசுகளை அளித்து வந்தது. இதனால் பொதுமக்கள் இந்த காளையின் மீது மிகுந்த பாசத்துடன் இருந்து வந்தனர்.

 

இந்த நிலையில் உடல்நலக்குறைவால் திடீரென காளை இறந்ததால் கிராமமக்கள் மீளாத் துயரில் ஆழ்ந்தன. உயிரிழந்த காளைக்கு மஞ்சள், குங்குமம் வைத்து மாலையிட்டு பட்டாடை போர்த்தி இறுதி சடங்கு செய்யப்பட்டது.


Leave a Reply