ஹிருத்திக் ரோஷனின் தீவிர ரசிகை! பொறாமை அடைந்த கணவன் செய்த செயல்!
நடிகர் ரித்திக் ரோஷனின் ரசிகை என்ற காரணத்திற்காக மனைவியைக் கொன்று தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார் கணவர். டோனி டோஜோ அமெரிக்கவாழ் இந்தியர். பாலிவுட்டின் ஆணழகன் என வர்ணிக்கப்படும் ரித்திக் ரோஷனின் தீவிர ரசிகை.
கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் வசித்து வந்த தினேஷ்வர் புத்திதட் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். ரித்திக் ரோஷனின் தீவிர ரசிகை என்பதாலேயே கணவருக்கும் மனைவிக்கும் இடையே அடிக்கடி வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது. எப்போதும் தமது மனைவி இன்னொருவரின் புகழ் பாடுவது தினேஷ்வருக்கு பிடிக்கவில்லை.
மெல்லமெல்ல அவருக்குள் பொறாமை இன்னும் வளர ஆரம்பித்துள்ளது. ரித்திக் ரோஷனின் பாடல்கள், படங்கள் என எது தமது வீட்டுத் தொலைக்காட்சியில் ஓடினாலும் அதனை உடனடியாக நிறுத்துமாறு சண்டை போடும் அளவிற்கு அவருக்குள் பொறாமைத் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. ஆனால் ரித்திக் ரோஷனின் படங்கள் அனைத்தையும் பார்த்துவிட வேண்டுமென்பது டோனி டோஜோவின் ஆசை.
இந்நிலையில்தான் சம்பவத்தன்று அருகில் உள்ள மால் ஒன்றில் ரித்திக் ரோஷனின் படத்தை பார்க்க செல்லவேண்டும் என மனைவி கூற, அதற்கு அவர் மறுப்பு தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் டோஜாவின் சகோதரிக்கு போன் செய்த தினேஷ்வர் தமது மனைவியை கொன்று விட்டதாகவும் வீட்டின் சாவியை குறிப்பிட்ட ஒரு பகுதியில் வைத்திருப்பதாகவும் கூறிவிட்டு தலைமறைவாகியுள்ளார்.

இதனையடுத்து டோஜாவின் சகோதரி காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். அவர்கள் சென்று பார்த்தபோது டோனி டோஜா குத்தி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அதே நேரத்தில் அருகில் இருந்த பகுதிக்கு சென்ற தினேஷ்வர் அங்கிருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இருவரது சடலங்களையும் கைப்பற்றிய காவல்துறையினர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு முன்னதாகவே கடந்த ஆகஸ்ட் மாதம் தனது கணவர் தன்னை தாக்கியதாக டோஜோ காவல்நிலையத்தில் புகார் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கத
📱 Share on WhatsApp 𝕏 Share on X




