ஜெர்மனி இளைஞரை திருமணம் செய்து கொண்ட தமிழக இளம்பெண்!

கோவையை சேர்ந்த இளம்பெண் ஜெர்மனி நாட்டு இளைஞரை காதலித்து தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்டார். கோவை துடியலூர் அருகே பன்னிமடையை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகளும் பொறியியல் பட்டதாரியான வித்யா பிரியா ஜெர்மன் நாட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

 

இவர் தன்னுடன் பணிபுரிந்து வந்த ஜெர்மன் இளைஞர் மைக்ரோ பில்டர்சை உயிருக்குயிராக நேசித்துள்ளார். இதனையடுத்து தனது காதல் விவகாரத்தை பெற்றோரிடம் கூறி வித்யா பிரபா சம்மதம் பெற்றுள்ளார்.

 

பின்னர் இருவரது திருமணமும் தமிழக முறைப்படி கோவை வெள்ளக்கிணறு பிரிவில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. ஜெர்மனி நாட்டு இளைஞர் கோவை பெண்ணுக்கு மாலை மாற்றி தாலி கட்டிய விதம், பாத பூஜை செய்ததையும் இருவீட்டாரும் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.


Leave a Reply