காஷ்மீரில், பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில், இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்; ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
காஷ்மீரின் பந்திபோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக, பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்பு படையினர் அப்பகுதிக்கு சென்று, தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது மறைந்திருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனால் இரு தரப்பினர் இடையே கடும் துப்பாக்கி சண்டை மூண்டது. இதில், இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.
தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் காஷ்மீரில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும் செய்திகள் :
தேர்தல் பாதுகாப்பு: திருவாடானையில் மத்திய பாதுகாப்புப் படையினரின் அதிரடி கொடி அணிவகுப்பு!
சட்டமன்ற தேர்தல் எதிரொலி - தீவிர பாதுகாப்பு பணியில் போலீசார்
நெருக்கடி கொடுப்பது பா.ஜ.க-வின் பழக்கம் - த.வெ.க நிர்வாகி நாஞ்சில் சம்பத் ஓபன் டாக்
தி.மு.க சொன்ன தொகுதி எண்ணிக்கையில் ஏற்பு இல்லை - பெ.சண்முகம் பேட்டி
அ.தி.மு.கவுக்காக நீங்க ஏன் நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்க? ஸ்டாலினை தாக்கிய அண்ணாமலை
எரிவாயு தட்டுப்பாட்டை சமாளிக்க மத்திய அரசு நடவடிக்கை..!






