சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி பதவியேற்றார்

சென்னை உயர்நீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக அம்ரேஷ்வர் பிரதாப் சாஹி இன்று காலை பதவியேற்றுக் கொண்டார்.

 

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமாணி ராஜினாமா செய்ததை அடுத்து பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டார்.

 

சென்னையில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், ஆளுநர் பன்வாரிலால் ஏ.பி. சாஹிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இவரது பதவிக்காலம், 2020ஆம் ஆண்டு டிசம்பர் 31 முடிவடைகிறது.

 

இந்த விழாவில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், தமிழக முதல்வர், சபாநாயகர் மற்றும் அமைச்சர்கள், உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Leave a Reply