ட்விட்டரில் டிரெண்டிங் ஆனது அயோத்தி – உலகளவில் முதல் 5 இடங்களை பிடித்தது

அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ள நிலையில், இந்த தீர்ப்பு குறித்த ஹேஷ்டேக்குகள், டிவிட்டரில் உலகளவில் முதல் 5 இடங்களை பிடித்து டிரெண்டிங் ஆகியுள்ளன.

 

பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த சர்ச்சைக்குரிய வழக்கு என்பதால், இந்தியா மட்டுமின்றி உலகமே, இந்த தீர்ப்பை அறிய ஆவலுடன் இருந்தது. இவ்வழக்கில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டவும், இஸ்லாமியர்கள் விரும்பும் இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை வழங்கவும் உத்தரவிட்டு, உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

 

இந்த நிலையில், அயோத்தி தொடர்பான வழக்கு, தீர்ப்பு ஆகியன உலகளவில் டிவிட்டரில் முதல் 5 இடங்களை பிடித்து, டிரெண்டாகி இருக்கிறது. #AyodhyaVerdict, #AyodhyaJudgement, #RamMandir, #AyodhyaCase, #JaiSriRam என்ற ஹேஷ்டேக்குகளில் இவை, டிரெண்டிங் ஆகியுள்ளன.


Leave a Reply