தீர்ப்பை மதிக்கிறோம்; சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் – சன்னி வக்பு வாரியம் அறிவிப்பு

அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை மதிக்கிறோம்; ஆனால் தீர்ப்பில் திருப்பியில்லை என்ரு சன்னி வக்பு வாரியம் கருத்து தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியான பின்பு, அது குறித்து சன்னி வக்பு வாரியம் கருத்து தெரிவிக்கையில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பை நாங்கள் முழுமையாக மதிக்கிறோம். அதே நேரம், இது திருபதி தரவில்லை என்று கூறியுள்ளது.

 

மேலும், உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்றும் சன்னி வக்கு வாரியம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, அனைத்து முஸ்லீம் சட்டவாரிய அமைப்பின் பிரதிநிதிகள் கூறுகையில், உச்சநீதிமன்ற தீர்ப்பின் முழு விவரம் கிடைத்த பின், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என்றனர்.

 

தீர்ப்பு நாங்கள் எதிர்பார்த்த வகையில் அமையவில்லை; யாரும் எந்தவிதமான போராட்டங்களிலும் ஈடுபட வேண்டாம், அனைவரும் அமைதி காக்க வேண்டும் எனவும் அனைத்து முஸ்லீம் சட்டவாரிய அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

நீதிபதிகள் கூறிய கருத்துக்கள் எதையும் நாங்கள் மறுக்கவில்லை; உச்சநீதிமன்ற தீர்ப்பில் எங்களுக்கு சில கருத்து முரண்பாடுகள் உள்ளன என்ரும் அனைத்து முஸ்லீம் சட்டவாரிய அமைப்பு தெரிவித்துள்ளது.


Leave a Reply