மக்கள் அமைதி காக்க வேண்டும்! பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோள்

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாகும் உள்ள நிலையில், நாட்டு மக்கள் அமைதி காக்கும்படி பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், உச்சநீதிமன்றம் வழங்கவிருக்கும் தீர்ப்பை நாடே எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். தீர்ப்பு எதுவாயினும் அனைத்துத் தரப்பினரும் அமைதி காக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

 

வழக்கின் தீர்ப்பு யாருக்கும் வெற்றி- தோல்வி அல்ல என்று கூறியுள்ள அவர், அமைதி, ஒற்றுமை, சகோதரத்துவத்தை நாட்டில் மேலும் வலுப்படுத்த நாம் அனைவரும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.


Leave a Reply