--- --:--:-- --

விடுதி வார்டனை குத்திக்கொலை செய்த தனியார் கல்லூரி மாணவர்

14

துறையூர் அருகே விடுதி வார்டனை குத்திக்கொலை செய்த தனியார் கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த கண்ணனூரில் தனியார் வேளாண் கல்லூரி செயல்பட்டு வருகிறது.

 

இக்கல்லூரியில் பெரம்பலூரை சேர்ந்த அப்துல் ஹக்கீம் படித்து வருகிறார். கல்லூரி விடுதி வார்டனாக கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த வெங்கட்ராமன் பணியாற்றி வந்தார். இந்நிலையில் அப்துல் ஹக்கீம் சரியாக படிக்காததால் அவரை பற்றி பெற்றோரிடம் வெங்கட்ராமன் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

 

இதனால் ஹக்கீமை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இந்நிலையில் ஆத்திரமடைந்த ஹக்கீம் வார்டன் வெங்கட்ராமனை கத்தியால் குத்தி கொலை செய்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மாணவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon