முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் துவக்கி வைக்கப்பட்ட கால்நடைகளுக்கான அம்மா ஆம்புலன்ஸ் வாகனத்தில் பல சிறப்பம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அம்மா ஆம்புலன்ஸ் வாகனத்தை தொடர்புகொள்ள 1 9 6 2 என்ற இலவச எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆம்புலன்சில் கால்நடைகள் இருக்கும் இடத்திற்கே சென்று சிகிச்சை அளிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாய், ஆடு, மாடு உட்பட அனைத்து கால்நடைகளுக்கும் முழுமையான சிகிச்சை அளிக்கும் வசதி உள்ளது. இந்த ஆம்புலன்சில் ஒரு மருத்துவவர், உதவியாளர், ஓட்டுநர் என மூன்று பேர் பணியில் இருப்பர்.
கால்நடைகளுக்கான முதலுதவி, அவசர சிகிச்சை மற்றும் உயிர் காப்பதற்கான உடனடி சிகிச்சை அளிக்கும் வசதியும் உள்ளது. கால்நடைகளுக்கு சிறுநீர் மற்றும் ரத்தப் பரிசோதனை செய்யும் வசதியும் இந்த ஆம்புலன்ஸில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அம்மா ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஜெனரேட்டர் இன்வெர்டர் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.சுமார் ஒரு டன் அளவிலான எடையை தூக்கும் தானியங்கி லிஃப்ட் வசதியும் உள்ளது. தேவைப்பட்டால் சிறிய அளவிலான அறுவை சிகிச்சை செய்வதற்கான வசதியும் ஆம்புலன்சில் உள்ளது.






