தமிழ்நாட்டில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நவீன வசதிகளுடன் தயார் செய்யப்பட்டுள்ள அம்மா ஆம்புலன்ஸ் சேவை வாகனத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டார்கள்.
புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஆம்புலன்ஸ் சேவை வாகனத்தில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான நவீன வசதிகளுடன் அறுவை சிகிச்சை அரங்கம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் மருத்துவர் குழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கால்நடைகளுக்கு அவசர மற்றும் உயிர்காக்கும் சிகிச்சைக்காக இலவச தொலைபேசி எண் 1 9 6 2 என்ற இலவச எண்ணும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எண்ணை தொடர்பு கொண்டால் உடனடியாக கால்நடைகள் இருக்கும் இடத்திற்கே சென்று மருத்துவக்குழு சிகிச்சை வழங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.