இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தனது பிறந்தநாளையொட்டி உருக்கமான கடிதம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். விராட் கோலி இன்று தனது 31வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பலர் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
இந்நிலையில் விராட் கோலி அவரது ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய பயணம் மற்றும் வாழ்க்கை கற்றுதந்த பாடம் குறித்து பல சுவாரஸ்ய தகவல்களை கடிதமாக எழுதி பதிவிட்டுள்ளார். அதில் பலருக்கு உங்களை பிடிக்கும், சிலருக்கு பிடிக்காது ஆனால் அதனை பற்றி எல்லாம் கவலைப்படாதீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.
மனம் சொல்வதைக் கேளுங்கள் என கூறியுள்ள விராட் கோலி கனவுகளை துரத்தி உங்களை உலகிற்கு வெளிக்காட்டுங்கள் என தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள் :
1,170 சிறப்பு பஸ்கள் இயக்கம்..!
கருப்பு நிற செய்தி.. காஷ்மீர் செய்தித்தாள்கள் எதிர்ப்பு..!
மயோனைஸுக்கு ஓராண்டு தடை - தமிழ்நாடு அரசு உத்தரவு
முப்படை தளபதிகளுடன் மோடி ஆலோசனை: பதில் தாக்குதல்
நான் ஏன் இவ்வளவு மோசமாக நடித்திருக்கிறேன்.. தனது நடிப்பு குறித்து பேசிய சமந்தா..!
பஹல்காமில் சுற்றுலா பயணிகளை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றது ஏன்?