கமல்ஹாசன் தான் விருதுக்கு பொருத்தமானவர்; ரஜினி அல்ல: எம்.பி ரவிக்குமார்

திரையுலகில் 60 ஆண்டுகள் பல பரிமாணங்களில் பங்காற்றிய நடிகர் கமலஹாசனுக்கு மத்திய அரசு விருது அறிவித்து இருக்கலாம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் திறமையான நடிகர் என்றாலும் வெற்றி நோக்கிலேயே திரைப்படங்களை தேர்வு செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

கமல்ஹாசன் நாயகனாக நடிக்கும் நேரத்தில் துணை நடிகராக அறிமுகமானவர்தான் ரஜினிகாந்த் என்றும், வாழ்நாள் சாதனையாளர் என்று பார்த்தால் 60 ஆண்டு காலங்களை தமிழ் திரையுலகிற்கு அர்ப்பணித்து மிகப்பெரிய பங்களிப்பை செய்த கமலஹாசன் அவர்களுக்கு தான் அது பொருத்தமாக இருந்திருக்கும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.


Leave a Reply