படப்பிடிப்பு நடத்துவதில் சிரமம்: பிரியங்கா சோப்ரா இன்ஸ்டா பதிவு

டெல்லியில் காற்று மாசுக்கு மத்தியில் படப்பிடிப்பு நடத்த மிகவும் சிரமம் ஏற்பட்டதாக பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். பிரியங்கா சோப்ரா நடிக்கும் தி வொய்ட் டைகர் என்ற திரைப்படத்திற்கான படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வருகிறது.

 

காற்று மாசுக்கு மத்தியில் படப்பிடிப்பை நடத்த மிகுந்த சிரமம் ஏற்பட்டதாகவும், கற்பனை செய்து கூட பார்க்க முடியாத வகையில் மாசின் தாக்கம் நிலவியதாகவும் முகமூடி அணிந்து புகைப்படத்துடன் பிரியங்கா சோப்ரா இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தன்னிடம் காற்றை சுத்திகரிக்கும் முகமூடி இருப்பதாகவும், சாலையோரத்தில் வசிப்பவர்களின் பாதுகாப்பிற்காக பிரார்த்திப்பதாகவும் பிரியங்கா சோப்ரா பதிவிட்டுள்ளார்.


Leave a Reply