இந்தியாவின் புதிய வரைபடம் வெளியீடு! 28 மாநிலங்கள், 9 யூனியன் பிரதேசங்கள்

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் புதிதாக உருவாகியுள்ள நிலையில் இந்தியாவின் புதிய வரைபடத்தை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

 

அக்டோபர் 31ஆம் தேதி முதல் இரு யூனியன் பிரதேசங்களும் செயல்பாட்டுக்கு வந்திருக்கும் நிலையில் இந்தியாவின் அதிகாரப்பூர்வ புதிய வரைபடத்தை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் காஷ்மீர், லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்களில் எல்லைகளும் மற்ற 7 யூனியன் பிரதேசங்கள் மற்றும் 28 மாநிலங்கள் குறித்த விவரங்களும் இடம்பெற்றுள்ளன.


Leave a Reply