இந்தியா மற்றும் ஆசியான் நாடுகளுக்கிடையே தாராள வர்த்தக ஒப்பந்தம் என்ற முடிவை தான் வரவேற்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தாய்லாந்திற்கு மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி ஆசியான் எனப்படும் தென்கிழக்கு ஆசிய கூட்டமைப்பு நாடுகளுடனான 16ஆவது மாநாட்டில் பங்கேற்றார்.
அதில் இந்தியாவுடன் பூரூனே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் தாராள வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வது என முடிவெடுக்கப்பட்டதை மோடி வரவேற்றார்.
இதன் மூலம் ஆசியான் நாடுகளுக்கு இடையே பொருளாதாரம் வலுப்படும் என தெரிவித்த மோடி ஆசியான் நாடுகளுடன் கடலோர பாதுகாப்பில் கைகோர்க்க இந்தியா தயார் என்றும் மோடி தெரிவித்துள்ளார். இதையடுத்து தாய்லாந்து பிரதமர் மற்றும் இந்தோனேசிய அதிபர் ஆகியோருடன் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.