--- --:--:-- --

கீழடி அகழாய்வு பொருட்களைக் காட்சிப்படுத்த 12 கோடியில் அருங்காட்சி : எடப்பாடி பழனிசாமி

9

கீழடி அகழாய்வு பொருட்களை காட்சிப்படுத்த 12 கோடியே 21 லட்சம் செலவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் தமிழ்நாடு தின விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

 

இதில் கலந்துகொண்டு உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு தின விழா 60 ஆண்டுகளுக்குப் பின்னர் அரசு விழாவாக கொண்டாடப்படுவதாக கூறினார். தமிழக எல்லையை காக்கப் போராடியவர்கள் அனைவரும் இத்தருணத்தில் நினைவுகூறத்தக்கவர்கள் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

உலகில் முதல் மனிதன் தோன்றியது தமிழகத்தில்தான் என்று மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் கூறியதையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார். தேனி மாவட்டம் கோம்பை மற்றும் கீழடியில் கண்டறியப்பட்ட வைகைக்கரை நாகரீகம் தமிழக வரலாற்றின் தொன்மையை பறைசாற்றுவதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.

 

தமிழகத்தின் வரலாறு, தொன்மை குறித்து அறிந்து கொள்ளும் வகையில் திருப்புவனம் அருகே உள்ள கொந்தகையில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon