டெல்லியில் காற்று மாசு காரணமாக புகை மண்டலம் சூழ்ந்து இருப்பதையடுத்து வரும் 5ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை தரப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் காற்று மாசு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நீடிக்கிறது.
இதனால் பல்வேறு பகுதிகளில் அடர்த்தியான புகை மூட்டம் சூழ்ந்து இருப்பதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். காற்றின் தரக்குறியீடு தற்போது 533 புள்ளிகளாக இருப்பதால் சுவாசிப்பதற்கு உகந்தது அல்ல என கூறப்படுகிறது.
எனவே குழந்தைகளின் நலன் கருதி வரும் ஐந்தாம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். மேலும் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் செய்திகள் :
அருவியில் குளித்தவர்களை அலறவிட்ட பாம்பு..!
டிரம்ப்பை கொல்ல ஈரான் திட்டம்: நெதான்யாகு
திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு - அறநிலையத்துறைக்கு மதுரை ஐகோர்ட் உத்தரவு
ஜெகன்மூர்த்திக்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
மக்கள்தொகையுடனான சாதிவாரிக் கணக்கெடுப்பு - அரசாணை வெளியீடு
மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க தேதியை அறிவித்த முதல்வர்..!