--- --:--:-- --

போலி கால் சென்டர் நடத்திய கும்பல் கைது

3index

சென்னையில் போலி கால் சென்டர் நடத்தி பொதுமக்களிடம் ஆவணங்களை பெற்று மோசடியில் ஈடுபட்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை சித்தாலபாக்கம் தில் ஃபீனிக்ஸ் என்ற பெயரில் கால் சென்டர் ஒன்று இயங்கி வந்துள்ளது. இந்த கால்செண்டரில் பொதுமக்களின் தொலைபேசி எண்களை பெற்று அவர்களை தொலைபேசியில் அழைத்து வங்கி கடன் வேண்டுமா எனக் கேட்டுள்ளனர்.

 

கடன் பெற விரும்புவோர் இடம் அவர்களின் ஆதார் வாக்காளர் அட்டை ஆகிய விவரங்களை பெற்றுள்ளனர். பின்னர் அவர்களுக்கே தெரியாமல் அவர்களின் பெயரில் வங்கி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட பலர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். இதன் அடிப்படையில் போலீசார் ரகசிய விசாரணை நடத்தி பக்கத்தில் உள்ள அந்த போலி கால் சென்டரில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

 

இதில் அவர்கள் பொதுமக்களிடம் மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த நிறுவனத்தை நடத்தி வந்தவர்கள் மற்றும் அந்த பணியாற்றி வந்த 6 பெண்கள் உட்பட 12 பேரை கைது செய்தனர். இதனிடையே கைது செய்யப்பட்டவரின் உறவினர்கள் சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகம் முன்பு திரண்டனர். இதில் கால் சென்டரில் மோசடி செய்து வந்தது அங்கு பணியாற்றி வந்த தங்கள் குழந்தைகளுக்கு தெரியாது எனக் கூறினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon