அதிமுக அரசும் மக்கள் மீது அக்கறை இன்றி செயல்படுவதாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிடும் ரூபி மனோகரன் ஆதரித்து சவளக்காரன் குளம் பகுதியில் ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய ஸ்டாலின் மக்கள் மீது அதிமுக அரசுக்கு எவ்வித அக்கறையும் இல்லை என்று தெரிவித்தார்.
அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் விலகி வந்து விட்டதாகவும் அதனை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை என்றும் ஸ்டாலின் சாடினார். பெண்களின் நலனுக்காக பல திட்டங்களை கொண்டு வந்த கட்சி திமுக தான் என்றும் அவர் கூறி வாக்கு சேகரித்தார்.