நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்ஃபான் கைது செய்யப்படவில்லை

நீட் ஆள் மாறாட்ட விவகாரத்தில் மாணவர் இர்ஃபான் கைது செய்யப்படவில்லை என சிபிசிஐடி விளக்கமளித்துள்ளது. தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நீட் ஆள்மாறாட்டம் விவகாரத்தில் வேலூரைச் சேர்ந்த மாணவரின் தந்தை சபியை நேற்று போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் மாணவர் இர்பான் சேலத்தில் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

ஆனால் கைது செய்யப்படவில்லை என சிபிசிஐடி போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். மாநாட்டில் உள்ளதாகவும் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சிபிசிஐடி ஐஜி விளக்கமளித்துள்ளார்.


Leave a Reply