பனி மூட்டம் காரணமாக மின் கம்பம் மீது வேன் மோதி விபத்து

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கடும் பனி மூட்டம் காரணமாக வேன் மோதி மின்கம்பம் சாலையின் குறுக்கே விழுந்ததால் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திம்பம் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.

 

இந்த பகுதிகளில் காலை நேரங்களில் கடுமையான பனி மூட்டம் நிலவுவதால் மலைப்பாதையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு மெதுவாக ஊர்ந்து செல்கின்றன. இந்நிலையில் இன்று காலை ஆசனூர் அருகே சென்ற பேருந்துப் அறிமுகத்தால் நிலை தடுமாறி சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தின் மீது மோதியதில் மின்கம்பம் சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது.

 

இதனால் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் தேங்கி நின்றன தகவலறிந்த மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சாலையில் விழுந்த மின் கம்பத்தை அகற்றினர். இதனால் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Leave a Reply