சிகரெட் வாங்க மறுத்த இளைஞரை கொலை செய்த கொடூரம்!

திருவள்ளூரில் சிகரெட் வாங்குவதற்கு கடைக்கு செல்ல மறுத்த இளைஞரை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் பெரியகுப்பம் மேட்டு தெருவைச் சேர்ந்த சாமுவேல் என்ற இளைஞர் நேற்றிரவு தனது நண்பர்களுடன் திருவள்ளூர் ரயில் நிலைய பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு அதே பகுதியைச் சேர்ந்த பொன்ராஜ் என்பவர் மதுபோதையில் காரில் அமர்ந்திருந்தார்.

 

அவ்வழியே சென்ற சாமுவேலை அழைத்து பொன்ராஜ் கடைக்கு சென்று ஒரு பாக்கெட் சிகரெட் வாங்கி வரும்படி மிரட்டியுள்ளார். இதற்கு சாமுவேல் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பொன்ராஜ் காரிலிருந்து இறங்கி சாமுவேலை கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய சாமுவேலை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

 

அங்கு சிகிச்சை பலனின்றி சாமுவேல் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த சாமுவேலின் உறவினர்கள் பொன்ராஜ் விட்டு அடித்து நொறுக்கினர். தொடர்ந்து அவருக்கு சொந்தமான காரையும் தீ வைத்து எரித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய பொன்ராஜ் தேடி வருகின்றனர்.


Leave a Reply