அம்மிக்கல்லை போட்டு கணவன் கொலை – மனைவிக்கு ஆயுள் தண்டனை

திருவள்ளூர் அருகே அம்மிக்கல்லை போட்டு கணவனை கொலை செய்த மனைவிக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ராஜு என்பவர் ஆந்திர மாநிலம் நாகலாபுரத்தில் சேர்ந்த கௌரியை சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து குழந்தை ஒன்றும் உள்ளது. குடிபோதையில் அடிக்கடி தகராறு செய்து வந்த ராஜி தனது நடத்தை தொடர்பாக தவறாகப் பேசியதால் அம்மிக்கல்லை எடுத்து கொலை செய்துவிட்டு கௌரி தலைமறைவானார்.

 

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த கொலை தொடர்பாக ராஜியின் கமலா கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். திருவள்ளூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்த நிலையில் கௌரிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.


Leave a Reply