ஈரோடு மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு !18 கிராம் எடை கொண்ட செயற்கைக்கோள்

தட்பவெப்பநிலை, காற்றின் ஈரப்பதம் போன்ற விவசாய தேவைகளுக்கான தகவல்களை நேரடியாக அனைவரும் எளிதில் தெரிந்துகொள்ளும் வகையில் 18 கிராம் எடை கொண்ட மிகச்சிறிய அளவிலான கையடக்க செயற்கைக்கோளை உருவாக்கி சாதனை படைத்திருக்கிறார்கள் ஈரோட்டை சேர்ந்த மாணவர்கள். ஈரோடு மாவட்டம் கஸ்பாபேட்டை அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீமதி சென்னிமலையில் பிளஸ்டூ படிக்கிறார்.

 

இவர்களது நண்பர்கள் ஆனந்தகுமார், நவநீதன், சந்தோஷ் குமார் ஆகியோருடன் இணைந்து சென்று செயற்கை கோளை உருவாக்கியுள்ளார். விவசாயத்திற்கு பயன்படும் வகையில் 18 கிராம் எடையில் 3 சென்டி மீட்டர் அளவுள்ள செயற்கைக்கோளை இவர்கள் வடிவமைத்துள்ளனர். முதற்கட்டமாக விவசாய தேவைக்காக வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில் இயற்கை பேரிடர், தண்ணீரில் இருப்பிடம், தட்பவெப்ப நிலை உட்பட பல்வேறு தகவல்களையும் பெறும் வகையில் மாற்றம் செய்ய முடியுமென கூறு மாணவர்களின் ஆலோசகர் தற்போது பேட்டரி மூலம் இயங்கும் இந்த செயற்கை கோளை விண்ணில் ஏவும் போது சூரியசக்தி மூலம் இயங்கும் வகையில் மாற்றம் செய்ய முடியும் என்கிறார்.

 

கையடக்க சேர்க்கை கொலை உருவாக்கியுள்ள இந்த மாணவர்கள் தங்கள் செயற்கைகோளும் ஒருநாள் விண்ணில் ஏவப்படும் என்று நம்பிக்கை கூறியுள்ளனர்.


Leave a Reply