.திருப்பூரில் மதுபோதையில் பாலத்திலிருந்து குதித்த நபர் – வைரல் வீடியோ

திருப்பூரில் மேம்பாலத்தில் இருந்து குடிபோதையில் ஒரு நபர் கீழே குறித்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. திருப்பூர் மாவட்டம் அந்த மாநகர் பகுதியில் பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இருக்கக்கூடிய மேம்பாலத்தில் இருந்து கீழே ஒரு வாலிபர் குதிக்கின்ற வீடியோவானது தற்போது வைரலாகி வருகிறது. நேற்று மாலை இந்த சம்பவமானது நடைபெற்று வருகிறது.

 

திருப்பூர் மாநகர பகுதியில் பல்லடம் மற்றும் அவினாசி சாலையில் இணைக்கும் விதமாக பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டிருக்கும். இந்த மேம்பாலத்துக்கு கீழேயும் சாலைகள் இருக்கின்றன. அந்த சாலையின் காங்கேயம் தாராபுரம் ஆகிய பகுதிகளில் இணைக்கக்கூடிய சாலையாக இருக்கும். இந்த சூழலில் நேற்று மாலை இந்த மேம்பாலத்தின் மீது ஒரு நபர் பத்து நிமிடத்துக்கும் மேலாக அந்த இரும்புக் கம்பியின் மீது அமர்ந்து தாக கூறப்படுகிறது.

 

அப்போது கீழே இருக்கக்கூடிய நபர்கள் அனைவரும் அவரை எச்சரிக்கும் விதமாக திட்டி கீழே இறங்குமாறு கூறியுள்ளனர். அதனையடுத்து அந்த நபர் அந்த மேம்பாலத்தில் இருந்து கீழே குதிக்கிறார். அப்போது அதிர்ஷ்டவசமாக கீழே உள்ள சாலையின் வழியாக ஒரு அரசு பேருந்து செல்கின்றது. அந்த அரசு பேருந்தின் மேல் கூரை மீது விழும் அந்த நபர் அதன்மீது நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.


Leave a Reply