பகவத் கீதையை கட்டாயமாக படிக்க வேண்டிய அவசியமில்லை : சூரப்பா

பொறியியல் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் பகவத் கீதை இடம்பெற்ற போதிலும் அதனை கட்டாயமாக படிக்க வேண்டிய அவசியம் இல்லை என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார். முதலாமாண்டு மாணவர்களுக்கு யோகா, இந்திய அரசிலமைப்பு, தத்துவவியல் உள்ளிட்ட ஐந்து பாடங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் தத்துவவியல் பாடத்தில் பகவத் கீதை ஒரு பாடமாக இடம்பெற்றுள்ளது .

 

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பல்கலைகழகம் ஆடிட் கோர்ஸ் அடிப்படையில் 5 பாடங்களில் ஏதேனும் ஒன்றை மாணவர்கள் தேர்வு செய்து படிக்கலாம் என்றும் இது கட்டாயம் கிடையாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா பட்டியலில் உள்ள 12 பாடங்களில் ஏதேனும் ஒன்றை விருப்ப படமாக எடுக்கலாம் என்றும் கூறினார்.


Leave a Reply