கிருஷ்ணகிரி அருகே வகுப்பில் கட்டியிருந்த பெண்ணுக்கு கர்ப்பமாக இருப்பதாக கூறி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சத்திரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தம்பதிக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் அந்த பகுதியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று மருத்துவ பரிசோதனை செய்த பெண்ணிடம் அவர் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்ந்து கடந்த 6 மாதங்களாக அந்த பெண்ணிற்கு கர்ப்பிணிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் அனைத்தும் அளிக்கப்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த வாரம் அஸ்வினி தனியார் ஸ்கேன் சென்டரில் சோதனை மேற்கொண்டபோது வயிற்றில் குழந்தை வளர்ச்சிக்கு பதிலாக நீர்க்கட்டி மட்டுமே இருப்பது தெரியவந்துள்ளது.