பாகிஸ்தான் ஆளில்லா விமானத்தில் ஆயுதங்களை வழங்கி வருவதாக பஞ்சாப் முதல்வர் தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிறு அன்று பஞ்சாப் மாநிலம் தார் வரை மாவட்டத்தில் சோலா சாகிப் என்ற கிராமத்தில் 4 பயங்கரவாதிகள் காவல்துறையிடம் சிக்கினர். அவர்கள் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் ஆதரவு காலிஸ்தான் ஜிந்தாபாத் படையை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
அவர்களிடமிருந்து 5 ஏகே 47 ரக துப்பாக்கிகள், நூற்றுக்கணக்கான தோட்டாக்கள், கையெறி குண்டுகள், செயற்கைக்கோள், தொலைபேசி, கள்ளநோட்டுகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன. இதை பஞ்சாப் முதல்வர் உள்துறை அமைச்சர் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். இதேபோல் ஆளில்லா விமானங்கள் மூலம் ஆயுதங்களை பாகிஸ்தான் வினியோகித்து உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தை தேசிய புலனாய்வு முகமை இடம் ஒப்படைக்க பஞ்சாப் காவல்துறை முடிவு செய்துள்ளது.