பேனர் வைத்த அதிமுகவைச் ஜெயகோபாலை ஏன் இன்னும் கைது செய்யவில்லை!

விதிமீறி பேனர் வைத்த அதிமுகவைச் சேர்ந்த செய்ய ஜெயகோபாலை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அதிமுக பிரமுகர் ஜெயகோபால் இல்ல திருமணத்திற்காக வீதி எங்கும் வைக்கப்பட்ட பேனர்களில் ஒன்று விழுந்து இளம்பெண் ஸ்ரீ கடந்த 12ஆம் தேதி உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கு விதி மீறல்கள் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

 

நீதிபதிகள் சத்யநாராயணன், சேஷசாயி அமர்வு முன் நடைபெற்ற விசாரணை அரசு தரப்பு, திமுக தரப்பு, பேனர்கள் தரப்பு என அனைத்து தரப்பினரும் ஆஜராகி தங்கள் வாதங்களை முன்வைத்தனர். பேனர் வைத்த ஜெயகோபால் இரண்டு வாரங்களாக தேடுவதாக சொல்கிறார்களே தவிர வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என திமுக தரப்பு வழக்கறிஞர் வில்சன் வாதத்தை முன்வைத்தார்.

இதை தொடர்ந்து பேசிய நீதிபதிகள் ஜெயகோபால் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போதிலும் ஏன் அவர் மீது இன்னும் நடவடிக்கை இல்லை என கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர் ஜெயகோபால் விரைவில் கைது செய்ய குழு அமைக்கப்பட்டு இருப்பதாக கூறினார். இதனிடையே விழா காலம் தொடங்க உள்ளதால் பேனர்களை ஒழுங்குபடுத்த விதிகளை வகுக்க வேண்டும் எனவும் அதுவரை பேனர்களை அச்சிடுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் பேரரசர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

அதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள் பேனர்கள் வைக்கக்கூடாது என கட்சியினருக்கு அறிவுறுத்தி இருப்பதாக திமுக மட்டுமே பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருக்கும் நிலையில் மற்ற கட்சிகள் தாக்கல் செய்யவில்லை என்றும் பேனர் விவகாரத்தில் பல உத்தரவுகளை பிறப்பித்தார். அதை அமல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அதிருப்தி தெரிவித்தனர்.


Leave a Reply