அதிமுகவை சீண்டினால் பெரிய ஆள் ஆகிவிடலாம் என்பற்காக நடிகர்கள் சீண்டுவதாக அமைச்சர் ஜெயகுமார்அமைச்சர் குறித்த கேள்விக்கு அதிமுக கேட்பாரற்று கிடப்பதாகவும், அவர்களை சீண்டினால் துர்நாற்றம் தான் வரும் எனவும்,அவர்களை சீண்டினால் பெரிய ஆள் ஆகிவிடலாம் என்று கிடையாது என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.கோவை காளப்பட்டியில் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற இருக்கும் திருமண மண்டபத்தை அக்கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி நேரில் பார்வையிட்டார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி வரும் 30 ம் தேதி காங்கிரஸ் கமிட்டியின் பொதுக்குழு கூட்டம் கோவையில் நடைபெறுவதாக தெரிவித்தார். ஜவஹர்லால் நேருவால்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இருப்பதாகவும்,நேரு போரை தொடர்ந்து நடத்தி இருந்தால் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இருந்திருக்காது எனவும் அமித்ஷா பேசி இருப்பதாகவும், மத்திய நிதி அமைச்சரும் வரலாறு தெரியாமல் பேசுவதாகவும், அமித்ஷாவும் வரலாறு தெரியாமல் தவறான தகவல்களை சொல்வதாக கூறியவர், முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் இப்படி பேசக்கூடாது எனவும் தெரிவித்தார். இவர்கள் தெரிந்து சொல்கின்றாரா இல்லை தெரியாமல் சொல்கின்றாரா என தெரியவில்லை என கூறிய அவர் காஷ்மீர் சரித்திரத்தை அமித்ஷா மாற்றி எழுத முயல்கின்றார் எனவும் , சர்வாதிகாரிகள் வரலாற்றை மாற்றத்தான் முனைவார்கள் எனவும் தெரிவித்தார்.
மேலும், நேருவால் தான் காஷ்மீர் இந்தியாவுடன் சேர்ந்தது என்றும், ஜின்னாவின் வேண்டுகோளை ஏற்காமல் நேருவின் வேண்டுகோளை ஏற்று காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இணைந்து கொண்டனர் எனவும் தெரிவித்தார்.போர் நடந்த போது என்ன நடந்தது என்பது தொடர்பான, அதிகார்வ பூர்வ ஆவணங்கள் அனைத்தும் அரசிடம் இருந்தும் கூட அதை பார்க்காமல் உண்மைக்கு புறம்பாக, வரலாற்றுக்கு புறம்பாக எதை வேண்டுமானாலும் திரித்து பேசலாம் என்ற இழிவான நிலையில் பா.ஜ.க நிர்வாகிகள் பேசுகின்றனர் எனவும் தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் இதை கண்டிப்பதாக தெரிவித்தார்.
மேலும், இடைத்தேர்தலில் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், வை.கோ ஆகியோர் பிரச்சாரம் மேற்கொள்வார்கள் என கூறிய அவர், வை.கோ எந்த குற்றச்சட்டையும் எங்கள் மீது கூறவில்லை. நாங்களும் வை.கோ மீது எந்த குற்றச்சாட்டையும் கூறவில்லை என கூறிய அவர், வை.கோ சொன்ன கருத்திற்கு பதில் கருத்து மட்டுமே சொன்னதாக தெரிவித்தார்.
நாளை முதல் விருப்ப மனு வாங்கப்பட்டு 25 ம் தேதி மாலை நேர்காணல் நடத்தப்பட இருப்பதாகவும் , அதில் வேட்பாளர் முடிவு செய்யப்படுவார் எனவும் தெரிவித்த அவர் இடைத்தேர்தலில் மூத்த தலைவர் குமரிஆனந்தன் போட்டியிடுகின்றாரா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர் விருப்ப மனு கொடுப்பதாக தெரிகின்றது எனவும், அதை பரிசீலிக்க முடியாது என்று சொல்ல முடியாது எனவும் தெரிவித்தார்.
ஆட்சி அதிமுகவிடம் இருந்தாலும் அவர்கள் தரத்துடன் இல்லை எனவும், எந்த மாநிலத்திலும் அரசியல் கட்சிகள் மாநில உரிமைகளை விட்டுக்கொடுத்தது இல்லை எனவும், ஆனால்
அதிமுக தனது உரிமைகளை பா.ஜ.க.விடம் விட்டுக்கொடுத்து இருப்பதாகவும், மத்திய அரசால் நீட் தீர்மானம் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது தொடர்பாக அவர்கள் வெளியில் தெரிவிக்காததை சுட்டிக்காட்டியவர் சொந்த உரிமைகளுக்கு கூட போராடாதவர்கள் அதிமுகவினர் என தெரிவித்தார்.
மேலும்,தலைமை செயலகத்தில் சி.பி.ஐ வந்த போது வாய் மூடி மவுனமாக இருந்தார்கள் என கூறிய அவர் மேற்கு வங்கத்தில் சி.பி.ஐ அதிகாரிகள் சென்ற போது அவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர் எனவும் கூறினார். மாநில உரிமைகளை பாதுகாக்க முடியாதவர்கள் விஜய்க்கு பதில் சொல்வதை விட, அப்போது சி.பி.ஐ க்கு பதில் சொல்லி இருக்க வேண்டும் எனவும், அப்போது அமைதியாக இருந்திருக்க கூடாது எனவும் தெரிவித்தார்.