வாகனத்தில் வந்தவரை வழிமறித்து குடிபோதையில் குத்திய மின்வாரிய வணிக ஆய்வாளர்..

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் ஆலங்காடு பகுதியை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது-26) இவருக்கும் ரோஜா கார்டன் பகுதியை சேர்ந்த பெருமாநல்லூர் தெற்கு பிரிவு மின்வாரிய அலுவலகத்தில் வணிக ஆய்வாளராக பணியாற்றி வரும் பிரபாகரன்-(30) என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று அய்யம்பாளையம் பகுதியிலுள்ள பெட்ரோல் பங்க் அருகே இருந்த உறவினரை அழைத்து வர தட்சிணாமூர்த்தி தனது வாகனத்தில் சென்றுள்ளார்.

 

அப்போது பெருமாநல்லூர் தெற்கு மின்வாரிய வணிக ஆய்வாளர் பிரபாகரன் திடீரென வழிமறித்து தட்சிணாமூர்த்தியிடம் கடும் வாக்கு வாதம் செய்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பிரபாகரன் சாலையோரத்தில் கிடந்த மது பாட்டிலை எடுத்து உடைத்து திடீரென்று தட்சிணாமூர்த்தி கையில் குத்தியதில் தட்சிணாமூர்த்தி படுகாயமடைந்தார் இதில் அவருக்கு அதிக இரத்தம் வழியவே உடனே அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து தட்சிணாமூர்த்தி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து பெருமாநல்லூர் காவல்துறையினர் பிரபாகரனிடம் விசாரணை செய்து வருகின்றனர்.பெருமாநல்லூர் பகுதியில் மின்வாரிய வணிக ஆய்வாளர் வாகனத்தில் வந்தரை வழிமறித்து மது போதையில் பாட்டிலால் குதித்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply