ஒன்றரை வயது குழந்தைக்கு வெற்றிகரமாக செய்யப்பட்ட டிப்ரமேட்டியா அறுவை சிகிச்சை

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வரலாற்றில் முதன்முறையாக ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு டிப்ரமேட்டியா எனப்படும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்த மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். ஈரோடு மாவட்டம் கொங்கம்பாளையம் சேர்ந்தவர் ரஞ்சித் குமார். ஓட்டுநரான இவருக்கு ஒன்றரை வயதில் ரித்திகா என்ற பெண் குழந்தை உள்ளது.

 

இந்த குழந்தைக்கு கடந்த 15 நாட்களுக்கு முன் காய்ச்சல் மற்றும் சளி இருந்ததால் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. இதில் குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தைக்கு வயிற்றுப் பகுதியில் இருக்கக்கூடிய கல்லீரல் உட்பட உடல் உறுப்புகள் மார்பு பகுதி வரை ஏறி இருந்ததாக கண்டுபிடித்தனர். இதையடுத்து குழந்தையை எனப்படும் அறுவை சிகிச்சையை மருத்துவக்குழுவினர் வெற்றிகரமாக மேற்கொண்டனர்.

 

அறுவை சிகிச்சை முடிந்து குழந்தை உடல் நலம் தேறியதையடுத்து மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் மற்றும் மருத்துவ குழுவினருக்கு குழந்தையின் பெற்றோர் நன்றி தெரிவித்தனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் மருத்துவர் கோமதி ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வரலாற்றில் முதன்முறையாக ஒன்றரை வயது குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.


Leave a Reply