கார்ப்பரேட் வரி குறைப்பு நடவடிக்கைக்கு பிரதமர் மோடி பாராட்டு

கார்ப்பரேட் வரி விகிதத்தை குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள அறிவிப்பு குறித்து பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். இது வரலாற்று சிறப்பு மிக்கது என்றும் மேக் இன் இந்தியா திட்டத்திற்கு ஊக்கம் தரும் நடவடிக்கை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வரி குறைப்பு நடவடிக்கை உலகம் முழுவதிலும் இருந்து தனியார் முதலீடுகளை ஈர்த்து தனியார் துறையில் போட்டியை மேம்படுத்தி அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க வழி வகுக்கும் என்றும் இது 130 கோடி மக்களுக்கும் வெற்றி என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

 

தொழில் வணிகம் செய்வதற்கு மிகச்சிறந்த இடமாக இந்தியாவை மாற்றுவதற்கு சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கும், இந்தியாவை 5 ட்ரில்லியன் பொருளாதாரம் ஆக மாற்றுவதற்கு செல்வ வளத்தை அதிகரிப்பதற்கும் தேவைகள் அனைத்தையும் அரசு செய்யும் என்பதை கடந்த சில வாரங்களாக வெளியிடப்பட்டு வரும் அறிவிப்புகள் தெளிவாக எடுத்து வைப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


Leave a Reply