மூலவர் லிங்கத்தை திருடியதாக நித்யானந்தா மீது புகார்

மேட்டூர் அருகே உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான மூலவர் லிங்கத்தை திருடியதாக நித்யானந்தா மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாண்டிய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோவில் சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பெங்களூரில் நடந்த சொற்பொழிவு ஒன்றில் பேசிய நித்யானந்தா தான்தான் அந்த கோவிலை கட்டியதாக கூறியுள்ளார்.

 

அதன் மூலவர் லிங்கம் தம்மிடமே உள்ளதாக தெரிவித்துள்ளார். இணையதளத்தில் பரவிய அந்த வீடியோவை கண்ட மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுதொடர்பாக குளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள அவர்கள் நித்யானந்தாவிடம் உள்ள மூலவர் லிங்கத்தை மீட்டு தரும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.


Leave a Reply