செல்போனால் ஏற்படும் மன அழுத்தத்தால் அல்ஸைமர் நோய் தாக்கம் அதிகரிப்பு

மன உளைச்சல் என்ற புலம்பல்களை அதிகளவில் கேட்கக்கூடிய காலகட்டத்தில் இருக்கிறோம். இந்த மன உளைச்சலும் பணிச்சுமையும் முதுமையில் வரவேண்டிய அல்சைமர் நோயை ஐம்பதுகளில் வரவேற்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் 3 வினாடிக்கு ஒருவர் அல்சைமர் நோயால் பாதிக்கப்படுவதாக ஆய்வுமுடிவுகள் கூறுகின்றன.

 

அல்சைமர் என்பது மூளையில் உள்ள நரம்புகள் பாதிப்படைவதால் ஏற்படும் நோயாகும். இதன் மூலம் ஞாபகத் திறன் குறைந்து மறதி அதிகரிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இது போன்ற நோய்கள் எல்லாம் நமக்கு வராது என்று நினைப்பவர்களுக்கு அதிர்ச்சியூட்டும் தகவலாக 65 வயதில் வரக்கூடிய அல்சைமர் நோய் தற்போது 50 வயதிலேயே வருவதாக துறை வல்லுனர்கள் கூறுகின்றனர். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை சார்பில் சென்னை சேத்துப்பட்டில் நடைபெற்ற நிகழ்வில் அல்சைமர் குறித்து முக்கிய ஆய்வுமுடிவுகள் விவரிக்கப்பட்டன.

 

பணிச்சுமை மாறிவரும் வாழ்க்கை முறை போன்றவை அல்சைமர் தாக்கத்திற்கான முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன. செல்போன் பயன்பாடும் சமூக ஊடகங்களால் ஏற்படும் மன அழுத்தமும் அல்சைமர் தாக்கத்தில் மிக முக்கிய பங்கு வகிப்பதாக கூறப்படுகிறது. ஆரோக்கியமான உணவுமுறை உடற்பயிற்சி குடும்பத்தினருடன் நேரம் செலவிட போன்றவற்றால் அல்சைமர் நோயிலிருந்து காத்துக் கொள்ளலாம் என்பதே மருத்துவர்களின் அறிவுரையாக உள்ளது.


Leave a Reply