பேனர் வைத்த அதிமுக பிரமுகர் தலைமறைவு

சென்னை பள்ளிக்கரணையில் விபத்தில் சிக்கிய இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழக்க காரணமான பேனரை வைத்த அதிமுக பிரமுகர் ஜெயகோபால் எட்டாவது நாளாக காணவில்லை அவர் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. செப்டம்பர் 12-ஆம் தேதி சென்னை பள்ளிக்கரணையில் பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த இளம்பெண்ணின் உயிரை அதிமுக பிரமுகரும் முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் வைத்திருந்த பேனர் பறித்தது.

தன்னுடைய வீட்டு திருமணத்திற்காக சாலைக்கு நடுவில் ஜெயகோபால் வைத்திருந்தனர். இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ மீது விழுந்தது. இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த சுபஸ்ரீ மீது லாரி ஏறியது. இதனையடுத்து சுபஸ்ரீ மீது மோதிய லாரி ஓட்டுநர் மனோஜ் கைது செய்யப்பட்டார்.

 

சுபஸ்ரீ உயிரிழக்க காரணமான பேனரை வைத்து அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மற்றும் அவரது உறவினர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். அதன்பிறகு எட்டு நாட்கள் ஆகியும் அவர்கள் கைது செய்யப்படவில்லை ஜெயகோபால் மேகநாதன் தலைமறைவாகி விட்டதாக தெரிகிறது.


Leave a Reply